பாகிஸ்தான் வீரர்களுக்கு கெடச்ச எதுவும் எனக்கு கெடைக்கல.. கோரிக்கை விடுத்துள்ள கனேரியா!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 61 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா, அவர் பாகிஸ்தான் அணி வெற்றிபெற பல முறை காரணமாக இருந்தாலும், இவர் இந்து மதத்தினைச் சார்ந்தவர் என்பதால், அவர் மீது இன ரீதியான பாகுபாடு காட்டப்பட்டதாக சமீபத்தில் சோயிப் அக்தர் கூறி இருந்தார். இந்த நிலையில் கனேரியாவின் நிலை பொருளாதார ரீதியாக மோசமாக உள்ளதாகவும் அதனால் அவர் பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அவர் கூறியதாவது, “நான் பல வகையான
 
பாகிஸ்தான் வீரர்களுக்கு கெடச்ச எதுவும் எனக்கு கெடைக்கல.. கோரிக்கை விடுத்துள்ள கனேரியா!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 61 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா, அவர் பாகிஸ்தான் அணி வெற்றிபெற பல முறை காரணமாக இருந்தாலும், இவர் இந்து மதத்தினைச் சார்ந்தவர் என்பதால், அவர் மீது இன ரீதியான பாகுபாடு காட்டப்பட்டதாக சமீபத்தில் சோயிப் அக்தர் கூறி இருந்தார்.

இந்த நிலையில் கனேரியாவின் நிலை பொருளாதார ரீதியாக மோசமாக உள்ளதாகவும் அதனால் அவர் பாகிஸ்தானிடம்  கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “நான் பல வகையான பிரச்சினைகளில் மாட்டித் தவித்து வருகிறேன், நான் என்னுடைய பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்திடமும், கிரிக்கெட் வாரியத்திடமும் உதவிகள் கேட்டுள்ளேன்.

பாகிஸ்தான் வீரர்களுக்கு கெடச்ச எதுவும் எனக்கு கெடைக்கல.. கோரிக்கை விடுத்துள்ள கனேரியா!!

எனக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் பலருக்கு கிடைக்கும் எந்த விஷயங்களும் எனக்கு கிடைத்ததில்லை.

நான் கிரிக்கெட் என்று வரும்போது பாகிஸ்தான் அணிக்காக என்னுடைய முழு உழைப்பினையும் கொடுத்துள்ளேன்.

என்னுடைய பல பிரச்சினைகள் எனக்கு மனதளவில் பெரிய அழுத்தத்தினைக் கொடுத்துள்ளன, தற்போது பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகிகள், பாகிஸ்தான் வீரர்கள் என பலரின் ஆதரவும் எனக்கு தேவை” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

From around the web