ஐதராபாத் அபார வெற்றி: குவாலிஃபையர் 2க்கு தகுதி!

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த நிலையில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானத்ததை அடுத்து பெங்களூர் அணி தற்போது பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. டிவில்லியர்ஸ் 56 ரன்களும், பின்ச் 31 ரன்களும் எடுத்தனர்.

SRH

இந்த நிலையில் 132 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணி 19.4 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் மிக அபாரமாக விளையாடி 50 ரன்களும் ஹோல்டர் மற்றும் மணிஷ் பாண்டே தலா 24 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி நாளை மறுநாள் நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்று டெல்லி அணியுடன் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web