புட்டபொம்மா பாடலுக்கு ஆட்டம் போடும் ஐதராபாத் அணி வீரர்கள்: வைரலாகும் வீடியோ

 
புட்டபொம்மா பாடலுக்கு ஆட்டம் போடும் ஐதராபாத் அணி வீரர்கள்: வைரலாகும் வீடியோ

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது இறுதி கட்டத்திற்கு வந்து இருக்கும் நிலையில் இன்று முதல் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற உள்ளன இன்று நடைபெறும் முதல் குவாலிபயர் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன 

இன்று வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்பதும், தோல்வி பெறும் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மீண்டும் போதும் என்றும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு நூலிழையில் தகுதி பெற்ற ஐதராபாத் அணி, தற்போது தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் புட்டபொம்மா என்ற பாடலுக்கு வார்னர் உள்பட அணியின் வீரர்கள் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

ஏற்கனவே ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய திரை உலகின் புகழ்பெற்ற பாடல்களுக்கு நடனமாடி வீடியோக்களை பதிவு செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே

From around the web