சூப்பர் ஓவரில் சொதப்பிய ஐதராபாத்: கொல்கத்தா அபார வெற்றி

 

இன்று நடைபெற்ற ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளும் தலா 163 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

முதலில் சூப்பர் ஓவரை சந்தித்த ஐதராபாத் அணி வார்னர் மற்றும் சமத் விக்கெட்டை இழந்ததால் மூன்று ரன்கள் மட்டுமே கொல்கத்தாவின் வெற்றிக்கு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதில் மோர்கன் ஒரு ரன்னும், தினேஷ் கார்த்திக் இரண்டு ரன்களும் எடுத்ததால் இரண்டு பந்து மீதமிருக்கையில் கொல்கத்தா அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி சூப்பர் ஓவரில் பேட்டிங் மற்றும் பீல்டிங் இரண்டிலும் சொதப்பியதால் கொல்கத்தா எளிதில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய வெற்றியின் மூலம் கொல்கத்தா 10 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்துவிட்டது. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்த ஐதராபாத் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும் சென்னை, ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் இருப்பதால் இந்த மூன்று அணிகளில் ஒரு அணிக்கு பிளே ஆப் செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

From around the web