அபார வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றில் நுழைந்த ஐதராபாத்!

 

இன்று நடைபெற்ற கடைசி மற்றும் முக்கிய லீக் போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத், பந்துவீச்சை தேர்வு செய்ததால், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 150 என்ற எளிய இலக்கை விரட்டிய ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 17.1 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதோடு புள்ளிப்பட்டியலில் 3வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. டேவிட் வார்னர் 85 ரன்களும், சஹா 58 ரன்களும் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த போட்டி ஐதராபாத் அணிக்கு மட்டுமின்றி கொல்கத்தா அணிக்கும் முக்கிய போட்டி என்று தெரிந்திருந்தும் மும்பை அணி வேண்டுமென்றே முக்கிய பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் டிரண்ட் போல்ட்டை களமிறக்கவில்லை. இதனால் தான் ஐதராபாத் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. ஐதராபாத் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே மும்பை வேண்டுமென்றே தோல்வி அடைந்ததா? என்ற சந்தேகத்தையும் இந்த போட்டி ஏற்படுத்தியுள்ளது.

எனவே இன்றுடன் லீக் போட்டி முடிவடைந்ததை அடுத்து மும்பை டெல்லி அணிகள் முதல் குவாலிஃபையர் போட்டியிலும் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் எலிமினேட்டர் போட்டியிலும் விளையாடவுள்ளன.

From around the web