கங்குலியின் உடல் நிலை எப்படி இருக்கின்றது? சற்று முன் வெளியான தகவல்!

 

பிசிசிஐ தலைவர் சவுரங் கங்குலிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்

இந்த நிலையில் கங்குலிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கின்றனர் என்ற செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கங்குலி உடல்நிலை தற்போது நல்ல நன்றாக இருப்பதாகவும் ஆனாலும் அவர் இன்னும் 72 மணி நேரத்திற்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் அதன் பின்னர் தான் அவருடைய உடல் நிலையை கணக்கில்கொண்டு மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது

ganguly

இருப்பினும் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளி வந்த தகவலின் படி கங்குலி நன்றாகவே இருப்பதாகவும் சீரியசான எந்தவித அறிகுறியும் அவருக்கு இல்லை என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னரே ரசிகர்கள் தற்போது நிம்மதி அடைந்து உள்ளனர்

From around the web