கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பது மூன்றாவது முறை: ஜடேஜாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

 

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது களத்தில் இருந்த ஜடேஜா முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார். இதனால் கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே அடிக்க வேண்டிய நிலையில் மீண்டும் ஒரு சிக்சர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார் ஜடேஜா. இதனை அடுத்து ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

ஒரு போட்டியின் கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பது என்பது ஜடேஜாவுக்கு இது புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு வினய் குமார் பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்ஸர் அடித்து சிஎஸ்கே அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அதேபோல் 2019ஆண்டும் ஒரு போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஜடேஜாவை தவிர ரோகித் சர்மா, அம்பத்தி ராயுடு, பிராவோ உள்ளிட்டவர்களும் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தாங்கள் விளையாடிய அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web