அவருக்கு வேறு வேலையே இல்லை: முன்னாள் வீரரை கடுமையாக விமர்சனம் செய்த ஸ்ரீகாந்த் 
 

 

இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில் டெஸ்ட் அணிக்கு கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்வு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கருக்கு ஸ்ரீகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது பதிவில் கடந்த சில போட்டிகளில் கேஎல் ராகுல் மிகவும் மோசமாக தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடுகிறார் என்பதற்காக அவரை இந்திய அணியின் டெஸ்ட் அணியில் சேர்த்தது சரியான தேர்வு அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார் இருப்பினும் இந்த கிடைத்த வாய்ப்பை கேஎல் ராகுல் நன்றாக பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் 

சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்த விமர்சனத்திற்கு ஸ்ரீகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். சஞ்சய் மஞ்சரேக்கருக்கு வேறு வேலையே இல்லை. அவர் மும்பையில் தாண்டி சிந்திக்க மாட்டார். கேஎல் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் நன்றாகவே விளையாடி உள்ளார். வேகப்பந்து எதிர்கொள்வதில் அவர் வல்லவர். ஆஸ்திரேலிய அணியுடனான முதல் போட்டியில் சதமடித்தார்

பிரச்சனை என்னவென்றால் சஞ்சய், மும்பையை தாண்டி சிந்திப்பது இல்லை. நாங்கள் சம வாய்ப்பு குறித்து பேசுகிறோம் என்று கூறியுள்ளார். இந்திய அணியின் இரண்டு முன்னாள் இந்திய வீரர்கள் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web