ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு நல்ல செய்தி: வைரலாகும் புகைப்படம்!

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி கொண்டிருந்த மும்பை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு திடீரென காயம் ஏற்பட்டதை அடுத்து மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை பொல்லார்டு ஏற்று நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் காயம் காரணமாக ரோகித் சர்மா ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது ரோகித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி அவர் நெட் ப்ராக்டீஸ் செய்துவரும் புகைப்படம் ஒன்று தற்போது டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்களில் வைரல் வருகிறது

இதனையடுத்து ரோகித் சர்மா விரைவில் இந்திய அணியில் இணைவார்கள் என்றும், அனேகமாக ஐபிஎல் இறுதிப்போட்டியிலேயே ரோஹித்சர்மா திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

மிக விரைவில் ரோஹித் சர்மா தனது உடல்நிலை ஃபிட் குறித்த மருத்துவ அறிக்கையை இந்திய அணி நிர்வாகத்திடம் தாக்கல் செய்து செய்வார் என்றும் அதனால் அவர் ஆஸ்திரேலியா செல்லும் அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

From around the web