ஒரே பிரிவில் தங்கம், வெள்ளி: பாரா ஒலிம்பிக்கில் அசத்தும் இந்தியர்கள்!

 
para olympic

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இன்று ஒரே பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை இந்திய வீரர்கள் பெற்று தந்துள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மணிஷ் நார்வெல் மற்றும் சிங் ராஜ் ஆகிய இருவரும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று உள்ளனர் 

மணிஷ் நார்வல் 218.2 புள்ளிகளும், சிங் ராஜ் 216.8 புள்ளிகளும் பெற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தியாவின் அவானி லெகாரா பாரா ஒலிம்பிக்கில் தங்கம், வெண்கலம் என இரண்டு பதக்கங்களை வென்று அசத்திய நிலையில் தற்போது இந்தியாவை சேர்ந்த 2 வீரர்கள் ஒரே பிரிவில் 2 பதக்கங்களை பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா ஏற்கனவே 2 தங்கம் 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என 15 பதக்கங்களை பெற்று இருந்த நிலையில் இன்றைய பதக்கத்துடன் சேர்த்து இந்தியாவுக்கு 3 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெள்ளி வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web