ரிஷப் பண்டுக்கு ஆதரவு கொடுங்க…. இந்திய கேப்டன் ரசிகர்களுக்கு சொன்ன அட்வைஸ்!!

இந்திய – வங்கதேச அணியின் 2 வது ஆட்டத்தில், வங்கதேச அணியில் துவக்க வீரர்களாக லிட்டன் தாஸ், நயீம் சேர்ந்து துவக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் ஜோடியை பிரிக்க இந்திய அணியின் வீரர்கள் திணறினர், விக்கெட்டை வீழ்த்தவேண்டும் என்ற முனைப்பில் வேகப் பந்துவீச்சாளர் கலீல் அஹ்மதுக்கு மாற்றாக ஐந்தாவது ஓவரில் சுழற் பந்துவீச்சாளர் சாஹலை பந்து வீச அழைத்தார் கோலி. சாஹல் அந்த ஓவரின் மூன்றாவது பந்திலேயே லிட்டன் தாஸ் விக்கெட்டை வீழ்த்தும்படி, பந்து வீசினார். நேராக
 

இந்திய – வங்கதேச அணியின் 2 வது ஆட்டத்தில், வங்கதேச அணியில் துவக்க வீரர்களாக லிட்டன் தாஸ், நயீம் சேர்ந்து துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இவர்கள் ஜோடியை பிரிக்க இந்திய அணியின் வீரர்கள் திணறினர்,

விக்கெட்டை வீழ்த்தவேண்டும் என்ற முனைப்பில் வேகப் பந்துவீச்சாளர் கலீல் அஹ்மதுக்கு மாற்றாக ஐந்தாவது ஓவரில் சுழற் பந்துவீச்சாளர் சாஹலை பந்து வீச அழைத்தார் கோலி.

சாஹல் அந்த ஓவரின் மூன்றாவது பந்திலேயே லிட்டன் தாஸ் விக்கெட்டை வீழ்த்தும்படி, பந்து வீசினார். நேராக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேட்ச் பிடிக்க ஏதுவாகச் சென்றது. ரிஷப் பண்ட் பந்தை ஸ்டம்ப்புக்கு சில இன்ச் முன்பே பிடித்து ஸ்டம்பிங் செய்தார்.

மூன்றாவது அம்பயர் ரிஷப் பண்ட் ஸ்டம்ப்புக்கு சில இன்ச் தூரம் முன்பு பந்தை பிடித்தது விதிப்படி தவறு என்று கூறிவிட்டார்.

ரிஷப் பண்ட் தொடர்ந்து செய்யும் செய்யும் தவறுகளால் பலரும் இவரை நீக்கி, தோனியை களமிறக்குங்கள் என்று கூறினர்.

இன்று இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற உள்ள நிலையில், ரிஷப் பண்ட் ஏதேனும் தவறுகள் செய்யும் பட்சத்தில் அவருக்கான ஆதரவினை அளிப்பது உங்களுடைய கடமையாகும்.

அதை விடுத்து தோனி தோனி என்று கத்த வேண்டாம்” என்று கோலி ரசிகர்களிடம் வேண்டி விரும்பிக் கேட்டுள்ளார்.

From around the web