கொல்கத்தா மருத்துவமனையில் கங்குலி: கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

பிசிசி தலைவர் சவுரவ் கங்குலி கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் பிசிசி தலைவருமான சவுரவ் கங்குலிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து உடனடியாக அவரது குடும்பத்தினர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது
மேலும் சவுரவ் கங்குலிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் சவுரவ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய முதல் கட்ட உடல்நிலை குறித்த தகவல் இன்னும் சற்று நேரத்தில் அறிக்கையாக வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது
சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து இதுகுறித்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறி வருகின்றனர்