மருத்துவமனையிலிருந்து கங்குலி டிஸ்சார்ஜ்: நலமாக இருப்பதாக அறிவிப்பு!

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது 

இந்த நிலையில் கங்குலியின் சகோதர சமீபத்தில் பேட்டியளித்த போது கங்குலியின் உடல் நிலை நன்றாக இருப்பதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார்

ganguly

இந்த நிலையில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிசிசிஐ தலைவர் கங்குலி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். வீடு திரும்பும்முன் அவர் செய்தியாளர்களிடம் ’நான் நலமாக இருக்கிறேன். எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு மிகவும் நன்றி. நான் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்த கோடானுகோடி ரசிகர்களுக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்

சவுரவ் கங்குலி குணமாகி வீடு திரும்பியதை அடுத்து அவரது ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியினை சமூகவலைதளத்தில் வெளிப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web