சென்னை அணியின் வெற்றிக்கு நான்கு முக்கிய காரணங்கள்!

 

நேற்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற நான்கு முக்கிய காரணங்கள் இதுதான்

1. இந்த சீசனின் முதல் போட்டியில் இருந்தே சொதப்பிய வாட்சன் நேற்று விஸ்வரூபம் எடுத்தார். முதல்முறையாக வாட்சன் மற்றும் டூப்ளஸி ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். கடந்த நான்கு போட்டிகளிலும் பவர்ப்ளேயில் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுக்கள் விழுந்த நிலையில் நேற்றைய போட்டியில் பவர்ப்ளேயை அடித்து ஆடி விக்கெட்டையும் இழக்காமல் இருந்தது சென்னை அணி

2. இந்த தொடரின் முதல் போட்டியில் இருந்தே ஃபார்மில் இருக்கும் டிபிளஸ்சிஸ் நேற்றைய போட்டியிலும் வழக்கம்போல் தனது அதிரடியை காட்டினார். நேற்றைய ஆட்டத்தில் 53 பந்துகளில் 87 ரன்களை குவித்திருந்தார். மொத்தமாக ஐந்து ஆட்டங்களில் 282 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

3. வாட்சன் மீது தோனி வைத்த நம்பிக்கை: கடந்த நான்கு போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பிய வாட்சனை அணியில் இருந்து கழட்டிவிடவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில் தோனி மட்டும் வாட்சன் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கையை வாட்சன் நேற்று நிரூபித்தார்

4. பஞ்சாப் பந்துவீச்சாளர்களின் சொதப்பலும் நேற்றைய சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாகும். விக்கெட் வீழ்த்த வேண்டுமென்ற நோக்கத்தோடு பந்து வீசிய பஞ்சாப் பவுலர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. குறிப்பாக காட்ரல், ஜார்டன், பிஷோனி, ஹர்ப்ரீத் ஆகியோர் பந்துகளை வாட்சன் காட்டு காட்டென்று காட்டினார். ஷமி மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாக பந்துவீச்னார்

From around the web