வெளிநாட்டவர்கள் பார்வையாளராக மட்டும் இருங்கள்: சச்சின் டெண்டுல்கர் அட்வைஸ்

 

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டை சேர்ந்த பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பார்வையாளர்களை மட்டும் இருந்தால் போதும் என சச்சின் டெண்டுல்கர் டுவிட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பாப் பாடகி ரிஹானா உள்பட ஒரு சில வெளிநாட்டு பிரபலங்கள் இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது

sachin

இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது என்றும் வெளிநாட்டவர்கள் பார்வையாளராக இருந்தால் மட்டும் போதுமானது என்றும் எதிலும் பங்கு எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டு பிரபலங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சச்சின் டெண்டுல்கரின் இந்தக் டுவிட் பெரும் பரபரப்பை உள்ளது


 

From around the web