ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக அமெரிக்க வீரர்: எந்த அணியில் தெரியுமா?

இந்த ஆண்டின் ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடிஅயே நடைபெறவுள்ளது என்பது தெரிந்ததே.
 

இந்த ஆண்டின் ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடிஅயே நடைபெறவுள்ளது என்பது தெரிந்ததே. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளரான ஹாரி கர்னி என்பவர் காயம் காரணமாக திடீரென இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து அவருக்கு பதிலாக மாற்று வீரராக அலி கான் என்பவர் இந்த அணியில் இணைந்துள்ளார். இவர் அமெரிக்க கிரிக்கெட் அணியை சேர்ந்த
என்பது குறிப்பிடத்தக்கது

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அமெரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவர் இடம்பெறுவது இதுவே முதல் என்பது குறிப்பிடத்தக்கது. கரீபியன் பிரீமியர் லீக் தொடர் உட்பட ஒருசில டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அலி கான் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினால் அடுத்தடுத்த ஐபிஎல் போட்டிகளிலும் இடம்பெறுவார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இவர் ஒரு சிறந்த வேகமாக பந்து வீச்சாளர் என்பதும் குறிப்பாக யார்க்கர் பந்துகள் வீசுவதில் வல்லவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web