முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலியின் ஆட்டத்தால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

முதல் ஒருநாள் போட்டி மழையால் சுமார் 2 மணி நேரம் தாமதமாக துவங்கியது, இதனால் ஓவர்கள் குறைக்கப்பட்டு 43 ஓவர்களாக போட்டி நடைபெற இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 5.4 ஓவர்கள் ஆடிய நிலையில் மீண்டும் மழை வந்தது. பின்னர், போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடந்து வந்த போது 13 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை வந்தது. இதை அடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. மழை வந்து வந்து சென்று கொண்டு
 

முதல் ஒருநாள் போட்டி மழையால் சுமார் 2 மணி நேரம் தாமதமாக துவங்கியது, இதனால் ஓவர்கள் குறைக்கப்பட்டு 43 ஓவர்களாக போட்டி நடைபெற இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 5.4 ஓவர்கள் ஆடிய நிலையில் மீண்டும் மழை வந்தது. பின்னர், போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடந்து வந்த போது 13 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை வந்தது. இதை அடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. மழை வந்து வந்து சென்று கொண்டு இருந்தது. பின்னர் மழை நின்றாலும் அவுட் பீல்டு மோசமாக இருந்தது.

முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலியின் ஆட்டத்தால்  மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

அதை சீரமைக்க நீண்ட நேரம் ஆனது. பின்னர், போட்டியை கி விடுவதாக அறிவித்தனர் அம்பயர்கள். 13 ஓவர் வீசப்பட்ட நிலையில் போட்டி கை விடப்பட்டது.

அவர்கள் இருவரும் ஆடியது கிரிக்கெட் ஆட்டம் அல்ல, மைதானத்தில் ஒலித்துக் கொண்டு இருந்த கரீபியன் இசைக்கு நடனமாடிக் கொண்டு இருந்தனர். கிரிக்கெட் பார்க்கப் போனவர்கள் பாட்டும், கூத்தும் பார்த்து விட்டு வந்தனர்.

அதிலும் விராட் கோலிக்கு என்ன ஆனதோ மழை நிற்க வேண்டி காத்திருந்த கேப்பில் எல்லாம் டான்ஸ் ஆடிக் கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் மைதானத்தில் காத்திருந்த போது, கிறிஸ் கெயிலுடன் சேர்ந்து, ஒரு ஆட்டம் போட்டார். கெயில் இந்த டான்ஸ் ஆடிய அளவுக்கு பேட்டிங் ஆடவில்லை.

இந்தப் போட்டியில் வீசப்பட்ட 13 ஓவர்களில் கிறிஸ் கெயில் பேட்டிங் ஆடினார். அப்போது 31 பந்துகளை சந்தித்து வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார் கிறிஸ் கெயில். அவரது பேட்டிங் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. 

From around the web