100 மீட்டருக்கு மேல் சிக்ஸர் அடித்தால் கூடுதல் ரன்: கே.எல்.ராகுல் கோரிக்கை!

 

ஒரு பந்தில் அதிகபட்சமாக ஆறு ரன்கள் மட்டுமே அடிக்க முடியும் என்பதும் ஒருவேளை அந்த பந்து நோபாலாக இருந்தால் 7 ரன்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஆனால் 100 மீட்டர் தூரத்துக்கு மேல் அடிக்கப்படும் சிக்ஸர்களுக்கு கூடுதலாக ரன்கள் வழங்க வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இன்று பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் விராட் கோலியும் ராகுலும் காணொளி விவாதத்தில் பங்கேற்றனர். அப்போது பேசிய கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடும் பெங்களூர் வீரர்கள் டிவில்லியர்ஸ் மற்றும் விராத் கோஹ்லியை ஐபிஎல் தொடரில் இருந்து நீக்க வேண்டும் எனவும் குறிப்பாக இன்று நடைபெறும் ஆட்டத்திலாவது நீக்க வேண்டும் என அவர் கிண்டலாக குறிப்பிட்டார்

மேலும் 100 மீட்டர் தாண்டி அடிக்கப்படும் சிக்ஸர்களுக்கு 6 ரன்களுக்கு மேல் வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராகுலின் இந்த கோரிக்கையை ஐசிசி ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web