பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது என்பதும், ஏற்கனவே நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 28ம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று மான்செஸ்டர் மைதானத்தில் 2வது டி20 போட்டி
 

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது என்பதும், ஏற்கனவே நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 28ம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று மான்செஸ்டர் மைதானத்தில் 2வது டி20 போட்டி நடைபெற்றது

இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்ததால் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. முகமது ஹபீஸ் 69 ரன்களும், பாபர் ஆசாம் 56 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 196 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மோர்கன் 66 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியை அடுத்து இங்கிலாந்து 1-0 எற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

From around the web