கடைசி ஓவரில் வெற்றியை கோட்டை விட்ட தென் ஆப்பிரிக்கா: இங்கிலாந்து திரில் வெற்றி

நேற்று டர்பன் நகரில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 205 என்ற இலக்கை மிக நெருங்கி விட்டது. அதாவது 19 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க அணிக்கு இன்னும் ஒரே ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது இந்த
 
கடைசி ஓவரில் வெற்றியை கோட்டை விட்ட தென் ஆப்பிரிக்கா: இங்கிலாந்து திரில் வெற்றி

நேற்று டர்பன் நகரில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது

இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 205 என்ற இலக்கை மிக நெருங்கி விட்டது. அதாவது 19 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க அணிக்கு இன்னும் ஒரே ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது

இந்த நிலையில் டாம் குர்ரான் வீசிய முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை என்றாலும் இரண்டாவது மூன்றாவது நான்காவது பந்துகளில் 12 ரன்கள் அடித்ததால் அந்த அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது

கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டாம் குர்ரான் அபாரமாக வீசிய 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்ததால் தென்ஆப்பிரிக்கா அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

From around the web