7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் இங்கிலாந்து: வெற்றி விளிம்பில் இந்தியா!

 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலாவது இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு சுருண்டது என்பது குறிப்பிடத்தக்கது 

india won11

இதனை அடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வரை இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருக்கையில் வெற்றிக்கு தேவை 366 ரன்கள் என்ற நிலையில் இங்கிலாந்து அணி தத்தளித்து வருகிறது 

இந்திய அணியின் அக்ஷர் பட்டேல் 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர். குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்ற நிலை இருப்பதால் வெற்றியின் விளிம்பில் அந்த அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று இந்திய அணி வெற்றி பெற்றால் அஸ்வின் தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web