வெற்றி பெறும் நிலையில் இங்கிலாந்து: வாய்ப்பை கோட்டைவிட்ட பாகிஸ்தான்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் போட்டி கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் கட்டத்திற்கு வந்துவிட்டது இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 219 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியை இரண்டாவது இன்னிங்சில் 169 ரன்களில் சுருட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி
 

வெற்றி பெறும் நிலையில் இங்கிலாந்து: வாய்ப்பை கோட்டைவிட்ட பாகிஸ்தான்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் போட்டி கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் கட்டத்திற்கு வந்துவிட்டது

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 219 ரன்கள் மட்டுமே எடுத்தது

ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியை இரண்டாவது இன்னிங்சில் 169 ரன்களில் சுருட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற 277 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து உள்ளதால் இன்னும் 93 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்கிற்கு தேவைப்படுகிறது. எனவே இங்கிலாந்து அணி வெற்றியை கிட்டத்தட்ட நெருங்கி விட்டதாகவே கருதப்படுகிறது

முதல் இன்னிங்சில் நல்ல ஸ்கோர் அடித்த பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தும் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பியதால் கிட்டத்தட்ட தோல்வி அடையும் நிலைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web