வெற்றி பெறும் நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி: இங்கிலாந்துக்கு முதல் தோல்வியா

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று முடிவடைய உள்ளது கடந்த எட்டாம் தேதி ஆரம்பித்த இந்த போட்டியில் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி 170 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்துள்ளது மேலும் அந்த அணி 8 விக்கெட்டுக்களை இழந்து விட்டதால் இன்று ஒரு சில ஓவர்களிலேயே மீதமுள்ள இரண்டு விக்கெட்டுக்களை இழந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவே மேற்கிந்திய தீவுகள் அணி
 
வெற்றி பெறும் நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி: இங்கிலாந்துக்கு முதல் தோல்வியா

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று முடிவடைய உள்ளது

கடந்த எட்டாம் தேதி ஆரம்பித்த இந்த போட்டியில் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி 170 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்துள்ளது

மேலும் அந்த அணி 8 விக்கெட்டுக்களை இழந்து விட்டதால் இன்று ஒரு சில ஓவர்களிலேயே மீதமுள்ள இரண்டு விக்கெட்டுக்களை இழந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எனவே மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்று பெற அதிகபட்சம் 200 ரன்களுக்குள் மட்டும்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மேற்கிந்திய தீவுகள் அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

இன்று கடைசி நாள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் இந்த டெஸ்ட் போட்டியின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 204/10
மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸ்: 318
இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்; 284/8

From around the web