43.3 ஓவர்களில் 337 இலக்கை எட்டிய இங்கிலாந்து: இந்தியாவின் சொதப்பல் பந்துவீச்சு

 

இன்று புனேவில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கொடுத்த 337 என்ற இலக்கை 43.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி எடுத்து அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளது. இன்றைய இந்திய பந்துவீச்சு சொதப்பலாக இருந்ததே இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இந்த நிலையில் 337 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி ஜானிபேர்ஸ்டோவின் அதிரடி சதம் காரணமாகவும் பென் ஸ்டோக்ஸ்-இன் அதிரடி ஆட்டம் காரணமாகவும் 43.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 337 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

india vs england

இன்றைய போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் படுசொதப்பலாக பந்துவீசினார்கள். குறிப்பாக குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 84 ரன்கள் கொடுத்தார். க்ருணால் பாண்ட்யா 72 ரன்களும், புவனேஷ்குமார் 63 ரன்களும் கொடுத்தனர். 

மிக அபாரமாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் இந்த நிலையில் இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதை அடுத்து தொடங்கியுள்ளது மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரை வெல்லும் அணி என்பது குறிப்பிடத்தக்கது

From around the web