ஜேசன் ராய் அதிரடி ஆட்டம்: இங்கிலாந்து அபார வெற்றி!

 

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது 

இன்றைய முதலாவது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

india vs england

இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்களும் ரிஷப் பண்ட் 29 ரன்கள் எடுத்தனர் 

இந்த நிலையில் 125 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி, ஜேசன் ராயின் அதிரடி ஆட்டத்தால் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஜேசன் ராய் நான்கு பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 49 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web