தோனி மகளுக்கு மிரட்டல் எதிரொலி: ஜார்கண்ட் அரசு எடுத்த அதிரடி முடிவு!

 

ஐபிஎல் தொடர் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த  தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது

குறிப்பாக கேப்டன் தோனி உள்பட முக்கிய வீரர்களின் ஆட்டம் மிக மோசமாக அமைந்துள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை அதிருப்தியில் உள்ளனர், இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் தோனி குடும்பத்திற்கும் குறிப்பாக தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதனை அடுத்து ஜார்க்கண்ட் மாநில அரசு தோனியின் பண்ணை வீட்டிற்கும் அவருடைய வீட்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தோனியின் பண்ணை வீட்டில் காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பில் வைத்திருக்க ஜார்க்கண்ட் அரசு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் விளையாட்டில் தோல்வி அடையும் அணியின் கேப்டனுக்கு மிரட்டல் விடுப்பது, அதிலும் அவருடைய ஐந்து வயது மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web