கவலைப்பட வேண்டாம், முழு பாதுகாப்பு கொடுப்போம்- ஐபிஎல் நிர்வாகம்!

வெளிநாட்டு வீரர்கள் தாய்நாடு திரும்பும் வரை முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது!
 
கவலைப்பட வேண்டாம், முழு பாதுகாப்பு கொடுப்போம்- ஐபிஎல் நிர்வாகம்!

கிரிக்கெட் பிரியர்களுக்கு கிரிக்கெட் திருவிழாவாகக் கொண்டாடப்படும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐபிஎல் .ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது இந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 8 அணிகள் களம் இறங்கியுள்ளன. சென்னை மும்பை கொல்கத்தா பெங்களூர் டெல்லி ஹைதராபாத் பஞ்சாப் ராஜஸ்தான் போன்ற அணிகள் ஆகும். மேலும் இதில் இந்திய வீரர்கள் அதிகம் பேர் உள்ளனர். மேலும் பல வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்களும் இந்த ஐபிஎல் தொடரில் களமிறங்கியுள்ளனர். இதனால் ஐபிஎல் போட்டியானது அனைத்து தர மக்களும் மிகவும் விமர்சையாக பார்க்கப்படும்.corona

இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் ஆட்கொல்லி நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்த வெளிநாட்டு வீரர்களின் வீடுகளில் உள்ளவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் அவர்களுக்கு தற்போது ஐபிஎல் நிர்வாகம் தரமான விளக்கம் ஒன்றை கொடுத்து, அதன்படி வெளிநாட்டு வீரர்கள் தாய்நாடு திரும்பும் வரை முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் வெளிநாட்டு வீரர்களுக்கு வெளியிலிருந்து உணவுகள் வழங்கப்படுவதில்லை எனவும் ஐபிஎல் தலைமை இயக்க அதிகாரி கூறுகிறார். மேலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.மேலும் இந்த எட்டு அணிகளில் 11 பேர் இறங்கும் போட்டியில் 4 வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web