விராத் கோஹ்லியிடம் வம்பிழுக்க வேண்டாம்: ஸ்டீவ் வாஹ் எச்சரிக்கை

 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து முதலில் 4 டெஸ்ட் போட்டிகள் அதன்பின்னர் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது என்பதும் அதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது என்பதும் தெரிந்ததே. இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய வீரர்கள் முதலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பின்னர் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

steve waugh


இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லியிடம் ஆஸ்திரேலியா வீரர்கள் யாரும் வாயை கொடுத்து வம்பிழுக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் எச்சரித்துள்ளார். கோஹ்லி மாதிரியான திறமையான பேட்ஸ்மேன்களிடம் ஸ்லெட்ஜ் செய்யாமல் அமைதியாக விளையாடுவதே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நல்லது என்றும், தவறுதலாக வாய் கொடுத்து வார்த்தை போரில் ஈடுபட்டால் அது கோஹ்லியை மேலும் உசுப்பேற்றிவிடும் என்றும், எனவே கோஹ்லியை பக்குவமாக கையாள வேண்டும் என்றும் அவரிடம் ஸ்லெட்ஜிங் வியூகங்கள் எடுபடாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பலமுறை இந்திய அணி ஆஸ்திரேலியா செல்லும்போதெல்லாம் ஸ்லெட்ஜிங் செய்துதான் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடினர் என்பதும், ஆனால் கோஹ்லி கடந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அந்த வீரரர்கள் ஸ்லெட்ஜ் செய்த போது விஸ்வரூபம் எடுத்து ரன்மிஷினாக மாறி தனது பேட்டால் ஸ்லெட்ஜிங் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web