கேவலமான ஆட்டம்: கேதாருக்கு குவியும் கண்டனங்கள்!

 

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது 

இந்த போட்டியை மிக எளிதாக சென்னை அணி வென்று இருக்கவேண்டியது. ஆனால் கடைசி நேரத்தில் கேதார் ஜாதவ் சொதப்பியதால் சென்னை அணி தோல்வியை கண்டது

கேதார் ஜாதவ்வை அணியில் சேர்த்ததும், கடைசி நேரத்தில் 21 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க வேண்டிய நேரத்தில் கேதார் ஜாதவ்வை களமிறங்கியதும் தோனி நேற்று செய்த மிகப் பெரிய தவறுகள் ஆகும்

கேதார் ஜாதவ் களமிறங்கி 12 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பதும், தான் சந்தித்த முதல் மூன்று பந்துகள் டாட் பந்துகள் என்பதும், 20வது ஓவரில் முதல் மூன்று பந்துகளில் ஒரு ரன் மட்டுமே அடித்ததும் இந்தப் போட்டியின் தோல்விக்கு முழுமையான காரணமாகவும் இருந்தது

அதிலும் கடைசி ஓவரின் முதல் பந்தை அடித்துவிட்டு அவர் ஓடாமல் இருந்தது மிகப்பெரிய தவறு என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக கெய்க்வாட்டை அணியில் இருந்து தூக்கிய கேப்டன் தோனி ஐந்து போட்டிகள் தொடர்ச்சியாக மோசமாக விளையாடி வரும் ஜாதவ்வை அணியில் வைத்திருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது தோனிக்கு அவரை அணியில் வைத்திருக்க வேண்டுமென்று அழுத்தம் இருக்கிறதா என்ற சந்தேகம் பல நெட்டிசன்கள் ஏற்படுத்துகிறது

From around the web