தோனியின் இடத்தை பிடிக்க தினேஷ் கார்த்திக் போட்ட பக்கா ப்ளான்? பரபரப்பு தகவல் 

 

கொல்கத்தா அணியின் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராக இருந்த தினேஷ் கார்த்திக் திடீரென தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மேலும் புதிதாக நேற்று கேப்டன் பதவியை ஏற்ற இயான் மோர்கன் மோசமான தோல்வியை யும் பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் திடீரென கேப்டன் பதவியை துறக்க என்ன காரணம் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக இருக்கும் தோனி அனேகமாக இந்த வருடத்துடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என தெரிகிறது

எனவே அடுத்த வருடத்திலிருந்து தான் சிஎஸ்கே அணியில் இடம் பெற வேண்டும் என்றும் அந்த அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக இடம்பெற முதலில் தன்னை ஒரு நல்ல பேட்ஸ்மேன் ஆக நிரூபிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து விட்டு முழுக்க முழுக்க அதிரடி பேட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது 

அதேபோல அடுத்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை நடைபெற இருப்பதால் இந்திய அண்யிலும் தோனியின் இடத்திற்கு பதிலாக தன்னை நிரப்புவதற்காக அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். கேப்டன் பதவியில் இருந்தால் மன அழுத்தம் அதிகமாகும் என்பதாலும் கீப்பிங், பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால் தனது எதிர்கால கிரிக்கெட் வாழ்விற்கும் நல்லது என்ற காரணத்தாலும் அவர் ராஜினாமா செய்து இருக்கலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன

From around the web