நடராஜனுக்கு அடித்த லக் வேறு யாருக்காவது இருந்ததா?

 

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு தொடரில் வாய்ப்பு கிடைப்பதே மிகப்பெரிய விஷயம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழகத்தை சேர்ந்த நடராஜனுக்கு ஒரே நேரத்தில் மூன்று தொடர்களில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியமாக உள்ளது. இப்படி ஒரு வாய்ப்பு வேறு இந்திய வீரருக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே 

சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் நெட் பிராக்டிஸ் செய்வதற்காக சென்றவர் நடராஜன் ஆனால் வருண் சக்கரவர்த்தி திடீரென காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக ஒருநாள் தொடரில் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டார்

natarajan

நடராஜனின் அபார பந்து வீச்சு காரணமாக ஒருநாள் தொடரை அடுத்து டி20 தொடரில் இடம் பெற்றார் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்தது என்பதும் குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலர் அவருக்கு பாராட்டு தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை அடுத்து தற்போது டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு நடராஜனுக்கு கிடைத்துள்ளது. சற்றுமுன் பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் உமேஷ் யாதவ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி உள்ளதாகவும் அவருக்கு பதிலாக நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து மூன்றாவது டெஸ்டில் நடராஜன் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது 

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் நெட் ப்ராக்டீஸ் என்ற நடராஜனுக்கு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்றுவித போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

From around the web