சி.எஸ்.கே அணியின் புதிய ஜெர்ஸியுடன் தல தோனி!

 

14வது ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கும் நிலையில் அதில் கலந்துகொள்ள இருக்கும் 8 அணிகளும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சில நாட்களாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தோனி சுரேஷ் ரெய்னா உள்பட பலர் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணிக்கு புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஜெர்ஸியை எம்எஸ் தோனி அறிமுகம் செய்து உள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

மஞ்சள் நிறத்தில் ஒரு பக்கம் மிந்த்ரா மற்றும் இன்னொரு பக்கம் இந்தியா சிமெண்ட்ஸ் ஆகிய விளம்பரங்களுடன் கூடிய இந்த ஜெர்ஸி பார்ப்பதற்கு அட்டகாசமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஜெர்ஸியுடன்தான் இந்த ஆண்டு சிஎஸ்கே அணி வீரர்கள் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web