டாஸ் வென்று தல தோனி எடுத்த அதிரடி முடிவு!

 

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தல தோனி அதிரடி முடிவு எடுத்திருப்பது சென்னை அணி ரசிகர்களுக்கு திருப்தி அளித்துள்ளது 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 29ஆவது போட்டி துபாய் மைதானத்தில் நடக்கிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தல தோனி முதல் முறையாக பேட்டிங் தேர்வு செய்துள்ளார்

கடந்த 7 போட்டிகளில் சென்னை அணி சேஸ் செய்தது என்பதும் அதில் இரண்டில் மட்டும் வெற்றி அடைந்து 5 போட்டிகளில் தோல்வியடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இன்று டாஸ் வென்ற தல தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் இன்றைய போட்டியில் ஒரு சிறு மாற்றமாக தமிழக வீரர் ஜெகதீசன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பியூஸ் சாவ்லா சென்னை அணியில் களமிறங்குகிறார். சென்னை அணியின் 11 போட்டியாளர்கள் பின்வருமாறு: வாட்சன், டீபிளஸ்சிஸ், அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், பிராவோ, தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், கரன் சர்மா, பியூஷ் சாவ்லா

அதேபோல் ஐதராபாத் அணியில் அபிஷேக் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நதீம் களமிறங்கியுள்ளார். இன்றைய போட்டியில் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஐராபாத்துக்கும் அணியும் 3 வெற்றிகள் மட்டுமே பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளதால் அந்த அணி இன்றைய போட்டியில் வென்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்ல உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web