தோனி தனியாக நின்று ஜெயித்து கொடுப்பார்: சடகோபன் ரமேஷ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தனியாக நின்று ஜெயித்து கொடுப்பார் என முன்னாள் தமிழக வீரர் சடகோபன் ரமேஷ் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தனியாக நின்று ஜெயித்து கொடுப்பார் என முன்னாள் தமிழக வீரர் சடகோபன் ரமேஷ் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்த ஐபிஎல் தொடரைபொறுத்தவரை சிஎஸ்கே அணிக்கு ஹர்பஜன்சிங், சுரேஷ் ரெய்னா விலகியது சோதனை தான் என்றாலும், அனுபவம் பெரும் பங்காற்றும். ஆகையால் களத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது அவசியம்

தல தோனி அணியை வழி நடத்துவதால் சென்னை அணியின் மீது உள்ள நம்பிக்கை ரசிகர்களிடம் குறையாது. எனக்கு தோனி மீது நம்பிக்கை இருக்கிறது. மைதானமும் நமக்கு ஏதுவாக இருக்கும். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோனி களத்தில் இறங்குவதால் அவரின் ஆட்டம் எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

ஆனால் அதே நேரத்தில் தோனி தனது பேட்டிங் திறமையாலும், தலைமைத்துவத்தினாலும் சில போட்டிகளை தனியாக நின்று ஜெயித்து கொடுத்துள்ளார். அதேபோல் ஐபிஎல் போட்டிகளிலும் ஜெயித்து கொடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.

தோனியின் கேப்டன்சி ஐபிஎல் மட்டுமல்ல 20-20 கிரிக்கெட் போட்டிகளிலும் கூட வெற்றி பெறும். எந்த வகையில் விளையாடினால் சரியாக இருக்கும் என்பதை நன்கு அறிந்து கேப்டன்சி செய்தவர் தோனி. ஆகையால் இந்த ஐபிஎல் தொடரில் அவர் மிகச் சிறப்பாக விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார்

From around the web