மீண்டும் இளைஞர்களுடன் களமிறங்கும் தோனி: இம்முறை வெற்றி கிடைக்குமா?

 
மீண்டும் இளைஞர்களுடன் களமிறங்கும் தோனி: இம்முறை வெற்றி கிடைக்குமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த போட்டியில் இளைஞர்களுடன் களமிறங்கி படுதோல்வி அடைந்தது என்பது தெரிந்தது 

இந்த நிலையில் தற்போது மீண்டும் இளைஞர்களுடன் தோனி களம் இறங்கி உள்ளார் என்பதும் இந்த வாய்ப்பை அந்த இளைஞர்கள் பயன்படுத்துவார்களா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்

கடந்த போட்டியில் கெய்க்வாட் மற்றும் ஜெகதீசன் அவர்கள் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்கள். இருப்பினும் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இன்றைய போட்டியிலும் இருவரும் களமிறக்கப்பட்டிருக்கின்றார்கள் 

அதேபோல் ஷர்துல் தாக்கூர் மற்றும் ஹாசில்டன் ஆகிய இருவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சான்ட்னர் மற்றும் மோனுகுமார் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

பெங்களூர் அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மொயின் அலி, உடானாவுக்கு பதில் களமிறங்கியுள்ளார்

From around the web