அம்பயரை மிரட்டிய தோனி: சிஎஸ்கே அணி தடை செய்யப்படுமா?

 

நேற்று சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் அம்பயரை சிஎஸ்கே கேப்டன் தோனி மிரட்டியதால் சிஎஸ்கே அணியை தடைசெய்ய வேண்டுமென நெட்டிசன்கள் டுவிட்டரில் ஆவேசமாக பதிவு செய்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணி 11 பந்துகளில் 24 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் விளையாடிக்கொண்டு இருந்தது. அப்போது 19-வது ஓவரை வீச வந்த ஷர்துல் தாக்கூர் வைட் பால் ஒன்றை வீசினார். அதனை அடுத்து அடுத்த பந்தும் வைட் பாலாக வீசப்பட்ட நிலையில் இரு கைகளையும் விரித்து அம்பயர் வைட் சிக்னல் அளிக்க தயாரானார் 

ஆனால் அப்போது தோனி ஆவேசமாக ஏதோ சொல்ல உடனே அம்பயர் வைட் சிக்னலை நிறுத்திவிட்டு திடீரென கையை கீழே இறக்கி வைத்துவிட்டார். இதனால் அந்த பால் வைட்பால் என அறிவிக்கப் படவில்லை. இதற்கு வெளியில் நின்று இந்த போட்டியை பார்த்துக்கொண்டிருந்த வார்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் 

இந்த நிலையில் அம்பயரையே தோனி மிரட்டி உள்ளார் என்றும் அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்றும் டுவிட்டரில் நெட்டிசன்கள் கூறி வருகின்றர். கிரிக்கெட்டை விட தோனி பெரியவரா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் 

ஆனால் அதே நேரத்தில் அம்பயரை தோனி மிரட்டினால் என்றால் தோனிக்கு மட்டுமே தடை விதிக்க வேண்டும் அல்லது அவருக்கு அபராதம் விதிக்கவேண்டும். சிஎஸ்கே அணியை எதற்காக தடை விதிக்க வேண்டும் என்று தோனிக்கு ஆதரவாகவும் சிஎஸ்கேவுக்கு ஆதரவாகவும் ஒரு சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web