தோனியின் ஓய்வு குறித்து வாய் திறக்க வேண்டும்- கம்பீர் அதிரடி

உலகக்கோப்பை முடிந்து தோனியின் ஓய்வுகுறித்த அறிவிப்பினை பலரும் எதிர்பார்த்திருக்கையில், அவர் இரண்டு மாத காலத்திற்கு விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதனால் தென் ஆப்ரிக்கா தொடரில் பங்கேற்கவில்லை. வரவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் தோனி பங்கேற்க மாட்டார். அடுத்து ராணுவப் பணியில் 2 மாதங்களாக ஈடுபட்டுவந்த தோனி, மீண்டும் ஓய்வு தேவை என 2 மாதங்கள் விடுப்பில் உள்ளார். இப்போது இதுவும் சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறுகையில், “ஓய்வு குறித்து பிசிசிஐ தோனியிடம்
 
தோனியின் ஓய்வு குறித்து வாய் திறக்க வேண்டும்- கம்பீர் அதிரடி

உலகக்கோப்பை முடிந்து தோனியின் ஓய்வுகுறித்த அறிவிப்பினை பலரும் எதிர்பார்த்திருக்கையில், அவர் இரண்டு மாத காலத்திற்கு விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதனால் தென் ஆப்ரிக்கா தொடரில் பங்கேற்கவில்லை. வரவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் தோனி பங்கேற்க மாட்டார்.

தோனியின் ஓய்வு குறித்து வாய் திறக்க வேண்டும்-  கம்பீர் அதிரடி

அடுத்து ராணுவப் பணியில் 2 மாதங்களாக ஈடுபட்டுவந்த தோனி, மீண்டும் ஓய்வு தேவை என 2 மாதங்கள் விடுப்பில் உள்ளார். இப்போது இதுவும் சர்ச்சையாகியுள்ளது.


இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறுகையில், “ஓய்வு குறித்து பிசிசிஐ தோனியிடம் கேட்க வேண்டும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சில ஆட்டங்களைத் தேர்வு செய்து ஆடுவது முரணான விஷயமாகும்.

நிச்சயம் இதுகுறித்த தகவலை அனைவரும் எதிர்பார்த்திருக்கும்நிலையில், தேர்வுக் கமிட்டியின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.


மேலும் அந்த முடிவினால் மட்டுமே இந்திய அணியில் புதிய வீரர்கள் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

ரிஷாப் பண்டிற்கு வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். மேலும் உலக கோப்பையில் இந்திய அணிக்கு பெருமை தேடித் தந்த ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

இதுகுறித்த அனைத்து முடிவுகளும் விரைவில் எடுக்கப்படுவது இந்திய அணியொன் எதிர்காலத்தினை சிறப்பாக அமைக்கும் என்று கூறியுள்ளார் கம்பீர்.

From around the web