ஓய்வு பெற்றபின் பாஜகவில் இணையும் தோனி – பாஜக தலைவர் சஞ்சை பஸ்வான்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டின் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் ஓய்வு பெறுவார் என நீண்ட நாட்களாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி நியூசிலாந்து அணியிடம் வெற்றியை இழந்து வெளியேறியதைத் தொடர்ந்து, தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்னும் தகவல்கள் வெளியாகி உள்ளது. காரணம், இவருடைய ஆட்டம் முன்பைப் போல் இல்லை என
 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டின் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் ஓய்வு பெறுவார் என நீண்ட நாட்களாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வருகிறது. 

இந்த உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி நியூசிலாந்து அணியிடம் வெற்றியை இழந்து வெளியேறியதைத் தொடர்ந்து, தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்னும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஓய்வு பெற்றபின் பாஜகவில் இணையும்  தோனி – பாஜக தலைவர் சஞ்சை பஸ்வான்

காரணம், இவருடைய ஆட்டம் முன்பைப் போல் இல்லை என ரசிகர்கள் தரப்பிலும், சக வீரர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது. அதேபோல் முன்னாள் வீரர்கள் ஒவ்வொரு லீக் ஆட்ட்த்தின் பின்னரும் தோனியின் ஆட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்த வண்ணமே உள்ளனர்.

அவர் ஓய்வு பெறுவது குறித்து அறிவித்தது, பலருக்கு பேரதிர்ச்சியாக இருந்தாலும், யாரும் வேண்டாம் என்று வலியுறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சை பஸ்வான், “தோனி பாஜகவில் இணைவார். இதைப் பற்றி இவர் நெடு நாட்களாகவே பேசிவருகிறார்.” எனத் தெரிவித்துள்ளார். “இது பற்றிய பேச்சு நீண்ட காலமாக தொடர்கிறது என்றாலும் முடிவை தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை அறிவித்த பிறகுதான் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும்” எனவும் கூறியுள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜக தலைவர் அமித் ஷா தோனியைச் சந்தித்து ஆதரவு கோரியது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, தோனி மற்றும் சஞ்சை பஸ்வான் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் வெளியாகிய வண்ணமே இருந்தன.

From around the web