சிங்கக்குட்டிகள் களமிறங்கிவிட்டது: தோனி, ரெய்னா குழந்தைகளின் அட்டகாசமான புகைப்படம்

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில் ஒரு வழியாக ஐக்கிய அரபு எமிரேட்டில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்று உறுதி செய்யப்பட்டது செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும் என்றும் இந்த போட்டிகளுக்கு மத்திய அரசு அதிகாரபூர்வமாக அனுமதி அளித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் 21ஆம் தேதி துபாய் செல்ல இருப்பதாகவும்
 

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில் ஒரு வழியாக ஐக்கிய அரபு எமிரேட்டில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்று உறுதி செய்யப்பட்டது

செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும் என்றும் இந்த போட்டிகளுக்கு மத்திய அரசு அதிகாரபூர்வமாக அனுமதி அளித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் 21ஆம் தேதி துபாய் செல்ல இருப்பதாகவும் அதற்கு முன் 16ஆம் தேதி சென்னை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 10 பவுலர்கள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி மற்றும் ரெய்னாவின் குழந்தைகள் ஒன்றாக கட்டிப் பிடித்து விளையாடிக் கொண்டு இருப்பது போன்றும் அதன் அருகில் இரண்டு சிங்ககுட்டிகள் விளையாடுவது போன்றும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்யப்பட்டுள்ளது

சிங்கக்குட்டிகளான சிஎஸ்கே வீரர்கள் களமிறங்க தயாராகிவிட்டன என்பதை குறிப்பதற்காக இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web