டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்புவது எப்போது?

20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு முன்னரே தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக தென்னாப்ரிக்க அணி கேப்டன் டூ-பிளசிஸ் தெரிவித்துள்ளார். உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான டிவில்லியர்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றதாக அறிவித்தார். ஆனால் ஓய்வில் இருந்து விடுபட்டு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட டிவில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், இதுகுறித்து தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சரிடம் அவர்
 
டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்புவது எப்போது?

20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு முன்னரே தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக தென்னாப்ரிக்க அணி கேப்டன் டூ-பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான டிவில்லியர்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றதாக அறிவித்தார். ஆனால் ஓய்வில் இருந்து விடுபட்டு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட டிவில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், இதுகுறித்து தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சரிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூரப்பட்டது

இந்த நிலையில் டிவில்லியர்ஸ்ஸை மீண்டும் அழைப்பது குறித்து அணியின் துணை பயிற்சியாளர்கள் மற்றுன் முன்னாள் கேப்டன் ஸ்மித் உள்ளிட்டோரிடம் ஆலோசித்து விட்டதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தென்னாப்ரிக்க கேப்டன் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

From around the web