டெல்லியின் மிக மெதுவான ஆட்டம்: பஞ்சாப் எளிதில் வெற்றி பெறுமா?

 

ஐபிஎல் போட்டி தொடரில் நேற்று சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில் இன்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன 

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து தற்போது டெல்லி அணி பேட்டிங் செய்து வருகிறது 

இந்த நிலையில் டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது என்பதும் தொடக்க ஆட்டக்காரர்களான பிபி ஷா மற்றும் தவான் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். குறிப்பாக தவான் ரன் ஏதும் எடுக்காமலேயே ரன் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது 

இதனை அடுத்து களமிறங்கிய நட்சத்திர ஆட்டக்காரர் ஹெட்மையர் 7 ரன்களில் அவுட் ஆகியது டெல்லி அணிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது 

தற்போது கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடி வருகின்றனர் என்பதும் இருவரும் தலா 39 மற்றும் 27 ரன்களை எடுத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

சற்று முன் வரை டெல்லி அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. இன்னும் 6 ஓவர்கள் மட்டுமே உள்ள நிலையில் அந்த அணி 150ஐ தொடுவதே கடினம் என்றும், எனவே பஞ்சாப் அணி இந்த இலக்கை எளிதில் எட்டிவிடும் என்றே கூறப்படுகிறது

From around the web