பெங்களூர் அணியின் ப்ளே ஆஃப் கனவு தவிடு பொடியானது! டெல்லி அசத்தல் வெற்றி!

டெல்லி அணிக்கும் பெங்களூர் அணிக்கும் இடையிலான ஐபிஎல் 2019 தொடரின் 46வது போட்டி டெல்லியில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புடன் 187 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 52 ரன்களும், ஷிகர் தவான் 50 ரன்களும் எடுத்தனர். பெங்களூர் அணியில் யுவேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ்,
 
Delhi capitals

டெல்லி அணிக்கும் பெங்களூர் அணிக்கும் இடையிலான ஐபிஎல் 2019 தொடரின் 46வது போட்டி டெல்லியில் நடைப்பெற்றது.

பெங்களூர் அணியின் ப்ளே ஆஃப் கனவு தவிடு பொடியானது! டெல்லி  அசத்தல் வெற்றி!

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புடன் 187 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 52 ரன்களும், ஷிகர் தவான் 50 ரன்களும் எடுத்தனர்.

பெங்களூர் அணியில் யுவேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நவ்தீப் சைனி மூவரும் தலா ஒரு விக்கெட்டுகளும் எடுத்தனர்.

அடுத்து பெங்களூர் அணி 188 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்தது. எனினும் விக்கெட்டுகள் சரிவால் பெங்களூர் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புடன் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் டெல்லி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக ஷிகர் தவான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்போட்டியில் வெற்றிப் பெற்றதன் சென்னை அணியை அடுத்து ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது டெல்லி அணி.

பெங்களூர் அணி இப்போட்டியில் வெற்றியை தவறவிட்டதன் மூலம் இனி வரும் போட்டிகளில் வெற்றிப் பெற்றாலும் ஃப்ளே ஆப் சுற்றுக்கு செல்வது இயலாமல் போனது.

From around the web