இறுதி போட்டிக்கு முன்னேறியது டெல்லி அணி: 19வது ஓவரில் 3 விக்கெட்

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முக்கிய போட்டியில் டெல்லி அணி மிக அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது 

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம்

delhi won

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 19வது ஓவரை வீசிய ரபடா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியதே டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.இதனால் டெல்லி அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பதும் இறுதி போட்டியில் மும்பையுடன் மோத உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மும்பை மற்றும் டெல்லி அணிகளில் எந்த அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெறும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web