தோல்வி அடைந்த பெங்களூரும் அடுத்த சுற்றுக்கு தகுதி!

 

இன்று நடைபெற்ற டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்றது

ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி இன்று தோல்வியடைந்தாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து டெல்லி அணி 153 என்ற இலக்கை 17.3 ஓவர்களில் எடுத்தால் பெங்களூர் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாது என்றும் 17.4 ஓவர்களில் எடுத்தால் பெங்களூர் அணியின் தகுதி பெற்று விடும் என்ற நிலையில் இருந்தது 

இந்த நிலையில் டெல்லி அணி 19 ஓவரில் தான் இலக்கை எட்டியது என்பதால் பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய இரண்டு அணிகளுமே தகுதி பெற்று விட்டன என்பது குறிப்பிடத்தக்கது

தற்போதைய நிலையில் மும்பை முதலிடத்திலும் டெல்லி இரண்டாவது இடத்திலும் உள்ளன மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை நாளை நடைபெறும் போட்டி முடிவில் தான் தெரிய வரும். நாளை ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் அந்த அணி மூன்றாவது இடத்திலும் பெங்களூர் 4வது இடத்திலும் இருக்கும் ஒருவேளை ஐதராபாத் தோல்வியடைந்தால் பெங்களூர் மூன்றாவது இடத்திலும் கொல்கத்தா 4-வது இடத்திலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web