407 ரன்கள் இலக்கு கொடுத்து டிக்ளேர்: வெல்லுமா இந்தியா?

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 407 ரன்கள் இலக்கு கொடுத்து ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்து உள்ளது. இதனையடுத்து இந்த இலக்கை இந்தியா எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 

ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கிய மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இனிங்ஸில் 338 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய இந்திய அணி 244 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

417 target a

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது 

இந்த நிலையில் தற்போது 2வது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்துள்ளது ரோகித் சர்மா 33 ரன்களும் மற்றும் கில் 30 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்து வருகின்றனர்

இன்னும் 343 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இந்தியா கைவசம் 10 விக்கெட்டுகளை வைத்துள்ளதால் இந்த போட்டியில் இந்தியா வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

From around the web