என்னா அடி! மிரண்டு போன மும்பை! டெல்லி அசத்தல் வெற்றி!

ஐபில் தொடரின் 3வது போட்டி டெல்லி அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த டெல்லி அணியின் பிரித்வி ஷா 7 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் 16 ரன்களில் வெளியேறினார். ஷிகர் தவானும், கோலின் இன்க்ராமும் நிதனமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். ஷிகர் தவான் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். கோலின் இன்க்ராம்
 
Delhi capitals

ஐபில் தொடரின் 3வது போட்டி டெல்லி அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைப்பெற்றது.

என்னா அடி! மிரண்டு போன மும்பை! டெல்லி அசத்தல் வெற்றி!

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த டெல்லி அணியின் பிரித்வி ஷா 7 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் 16 ரன்களில் வெளியேறினார்.

ஷிகர் தவானும், கோலின் இன்க்ராமும் நிதனமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். ஷிகர் தவான் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். கோலின் இன்க்ராம் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 78 ரன்களை எடுத்து அவுட்டாகமல் இருந்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை எடுத்தது.

மும்பை அணியில் மிட்செல் மேக் கிளீனகன் 3 விக்கெட்டுகளும், ஜாஸ்பிர்ட் பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் பென் கட்டிங் மூவரும் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 214 என்ற கடினமான இலக்கை எதிர்கொள்ள முடியாமல் தொடக்கத்திலிருந்தே தடுமாறியது. யுவராஜ் சிங் மட்டும் 53 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இப்போட்டியில் பும்ராவிற்கு பந்து வீச்சின் போது காயம் ஏற்பட்டதால் அவர் பேட்டிங் செய்யவில்லை. இதனையடுத்து மும்பை அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களை எடுத்தது. இதனால் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

டெல்லி அணியில் இஷாந்த் சர்மா மற்றும் ககிஸோ ரபாடா இருவரும் தலா 2 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட், ராகுல் டெவாடியா, கீமோ பால் மற்றும் அக்சர் படேல் நல்வரும் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார்.

From around the web