பகல்- இரவு ஆட்டம் சக்ஸஸ்… கங்குலி போட்ட அடுத்த திட்டம்!!

டெஸ்ட் போட்டிக்கு அதிக அளவில் பார்வையாளர்களை வர வைக்க வேண்டும் என்ற நோக்கில், பகல் இரவு டெஸ்ட் போட்டியினை இந்தியாவில் முதல்முறையாக நடத்த சவுரவ் கங்குலி திட்டமிட்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்ற கங்குலி தான் எடுத்த முதல் முடிவான பகல் இரவு டெஸ்ட் போட்டியினை வெற்றிகரமாக செய்தும் முடித்தார். டிக்கெட்டுகள் 4 நாட்களுக்கும் விற்றுத் தீர்ந்தது. தற்போது கங்குலி ரசிகர்களைக் கவர சூப்பர் சீரிஸ் என்ற வேறு ஒரு திட்டத்தினை செயல்படுத்த உள்ளதாக
 
பகல்- இரவு ஆட்டம் சக்ஸஸ்… கங்குலி போட்ட அடுத்த திட்டம்!!

டெஸ்ட் போட்டிக்கு அதிக அளவில் பார்வையாளர்களை வர வைக்க வேண்டும் என்ற நோக்கில், பகல் இரவு டெஸ்ட் போட்டியினை இந்தியாவில் முதல்முறையாக நடத்த சவுரவ் கங்குலி திட்டமிட்டார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்ற கங்குலி தான் எடுத்த முதல் முடிவான பகல் இரவு டெஸ்ட் போட்டியினை வெற்றிகரமாக செய்தும் முடித்தார்.

பகல்- இரவு ஆட்டம் சக்ஸஸ்… கங்குலி போட்ட அடுத்த திட்டம்!!

டிக்கெட்டுகள் 4 நாட்களுக்கும் விற்றுத் தீர்ந்தது. தற்போது கங்குலி ரசிகர்களைக் கவர சூப்பர் சீரிஸ் என்ற வேறு ஒரு திட்டத்தினை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது, “இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சூப்பர் சீரிஸ் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் போட்டி நடத்த உள்ளோம்.

இந்த சூப்பர் சீரிஸ் தொடர் அடுத்த ஆண்டு முதல் நடைபெறும், மேலும் இதுகுறித்த சம்மதத்தினை அனைத்து கிரிக்கெட் வாரியத்திடம் பெற்ற பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடுவோம்” என்று கூறியுள்ளார்.

From around the web