டாஸ் வென்ற சிஎஸ்கே அணி: அணியில் அதிரடி மாற்றம்!

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோத இருக்கும் நிலையில் சற்று முன்னர் போடப்பட்ட டாஸில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து கொல்கத்தா அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியத்துவம் இல்லாத போட்டி என்றாலும் கொல்கத்தா அணி இன்று வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பைப் பெறும். அதே நேரத்தில் சென்னை அணி வெற்றி பெற்று விட்டால் கொல்கத்தா அணி சென்னை போலவே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது 

இன்று சென்னை அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. டீபிளஸ்சிஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வாட்சன் மீண்டும் இணைந்துள்ளார். அதேபோல் கரண் சர்மா மற்றும் நிகிடி ஆகியோர் அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இரு அணி விவரம் பின்வருமாறு:

சென்னை அணி: ருத்ராஜ், வாட்சன், அம்பத்தி ராயுடு, தோனி, ஜெகதீசன், ஜடேஜா, சாம் கர்ரன், சாண்ட்னர், தீபக் சஹார், கரண்சர்மா மற்றும் நிகிடி

கொல்கத்தா அனி: கில், ரானா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், மோர்கன், சுனில் நரேன், ரிங்கு சிங், பாட் கம்மின்ஸ், கமலேஷ் நாகர்கோட்டி, ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி

From around the web