பெங்களூரு அணியை மொத்தமாக சுருட்டி சென்னை அணி அசத்தல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான முதலாவது ஐபில் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் திறமையான பந்து வீச்சால் பெங்களூரு அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தைக் கண்டது. ஹர்பஜன் சிங் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இம்ரான் தஹீரும் 4 ஓவர்கள் 3 விக்கெட்டுகளை எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்கள்
 
Chennai super kings

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான முதலாவது ஐபில் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

பெங்களூரு அணியை மொத்தமாக சுருட்டி சென்னை அணி அசத்தல்!

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

சென்னை அணியின் திறமையான பந்து வீச்சால் பெங்களூரு அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தைக் கண்டது.

ஹர்பஜன் சிங் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இம்ரான் தஹீரும் 4 ஓவர்கள் 3 விக்கெட்டுகளை எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்கள் எடுத்தார். ப்ராவோ ஒரு விக்கெட்டும் எடுத்தார்.

சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத பெங்களூரு அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் எடுத்துள்ளது.

பெங்களூர் அணியில் பார்திவ் பட்டேல் அதிகப்பட்சமாக 35 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 71 ரன்கள் என்ற எளிமையான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

From around the web