விதியை மீறியதால் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்ட சிஎஸ்கே வீரர்!

 

கொரனோ பாதிப்புக்கு இடையே ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணி வீரர்கள் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

அதன்படி தனிமைபடுத்திய அறை, பயிற்சி மையம் மற்றும் விளையாடும் மைதானம் தவிர அவர்கள் வேறு எங்கும் செல்லக்கூடாது. அதேபோல் வீரர்களை சந்திக்க வெளியாட்களுக்கு அனுமதிக்க கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வீரர் கே.எம். ஆசிப் என்பவர் இந்த விதியை மீறி விட்டதாக கூறப்படுகிறது. பயிற்சிக்கு சென்றுவிட்டு ஓட்டல் அறைக்கு திரும்பிய ஆசிப் தன்னுடைய அறையின் சாவியை மறந்து வைத்து விட்டதாகவும் புதிய சாவியை வாங்குவதற்காக ரிசப்ஷன் வந்துள்ளதாகவும் தெரிகிறது 

ரிசப்ஷன் வருவதற்கு அவருக்கு அனுமதி இல்லை என்பதால் இந்த விதிமுறையை மீறிய ஆசிப் மீண்டும் ஆறு நாட்களுக்கு மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதேபோல் மூன்று முறை விதியை மீறினால் ஐபிஎல் போட்டியில் விளையாடவே அவருக்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web